Kada Kada Vandi – கடகடா வண்டி
Lyrics in Tamil
கடகடா கடகடா வண்டி வருகுது
களை மாடு இரண்டு பூட்டி வண்டி வருகுது
டக்டக் டக்டக் வண்டி வருகுது
தாவித் தாவி ஓடும் குதிரை வண்டி வருகுது.
ட்ரிங்ட்ரிங் ட்ரிங்ட்ரிங் வண்டி வருகுது
சீனு ஏறி ஓட்டும் சைக்கிள் வண்டி வருகுது.
பாம்பாம் பாம்பாம் வண்டி வருகுது.
பாய்ந்து வேக மாக மோட்டார் வண்டி வருகுது
குப்குப் குப்குப் வண்டி வருகுது.
கும்ப கோண மிருந்து ரயில் வண்டி வருகுது