Meow Meow Poonaiyar Rhyme Lyrics and Video – மியாவ் மியாவ் பூனையார்
Tamil Lyrics
மியாவ் மியாவ் பூனையார்
மீசைக் காரப் பூனையார்
ஆளில் லாத வேளையில்
அடுக்க ளைக்குள் செல்லுவார்
பால் இருக்கும் சட்டியைப்
பார்த்துக் காலி பண்ணுவார்
மியாவ் மியாவ் பூனையார்
மீசைக் காரப் பூனையார்
இரவில் எல்லாம் சுற்றுவார்
எலிகள் வேட்டை ஆடுவார்
பரணில் ஏறிக் கொள்ளுவார்
பகலில் ஆங்கே தூங்குவார்
மியாவ் மியாவ் பூனையார்
மீசைக் காரப் பூனையார்