Chinna Chinna Naikutti – சின்னச்சின்ன நாய்க்குட்டி
Chinna Chinna Naikutti Rhyme Tamil Lyrics
சின்னச்சின்ன நாய்க்குட்டி
சிங்கார நாய்க்குட்டி
வண்ண வண்ண நாய்க்குட்டி
வாலை ஆட்டும் நாய்க்குட்டி
பொன்னைப் போன்ற வண்ணமும்
பொலிவுமிக்க வதனமும்
மின்னல்போலத் துள்ளிடும்
மேனி கொண்ட நாய்க்குட்டி
காலைக்காலை சுற்றிவந்து
பாலைப்பாலைக் கேட்டிடும்
பாலைத் தட்டில் ஊற்றிவைக்க
வாலையாட்டிக் குடித்திடும்
காலைமாலை வேளையில்
காற்று வாங்கச்சென்றிடும்
காற்றுவாங்கி வந்தபின்னர்
சோற்றைக் கேட்டு நின்றிடும்
நல்லநல்ல நாய்க்குட்டி
நயமுடைய நாய்க்குட்டி
நாக்கை நாக்கை நீட்டிடும்
மூக்கைமூக்கை நக்கிடும்
கன்னத்தோடு கன்னம் வைத்துக்
கொஞ்சுமெந்தன் நாய்க்குட்டி
என்னுடைய சித்தப்பா
எனக்குத் தந்த நாய்க்குட்டி