Avvai Patti Song Lyrics – ஔவை பாட்டி

Lyrics in Tamil

ஔவைப் பாட்டி நல்ல பாட்டி – நமக்(கு)
ஆத்தி சூடி தந்த பாட்டி .
செவ்வை யாக நாமெல் லோரும் – வாழச்
சிறந்த வழி காட்டும் பாட்டி.

மன்னர் மரி யாதை செய்ய – நாட்டு
மக்கள் போற்றி வந்த பாட்டி .
என்ன செல்வம் வந்த போதும் – அதை
ஏழை கையில் தந்த பாட்டி.

எந்த ஊரும் சொந்த ஊரே – என
எங்கும் சுற்றி வந்த பாட்டி.
சொந்த நலன் ஏதும் இன்றி – தமிழ்த்
தொண்டு செய்தே வாழ்ந்த பாட்டி.

Avvai Patti Tamil Rhymes Video:

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *