Patti engal patti Lyrics – பாட்டி எங்கள் பாட்டி

Grandma Song Tamil Lyrics

பாட்டி எங்கள் பாட்டி – எல்லாம்
பல்லும் போன பாட்டி .
கேட்கக் கேட்கக் கதைகள் – இன்னும்
கேட்கக் செய்யும் பாட்டி.

கடின மான பண்டம் – அதைக்
கடிக்கத் தெரியாப் பாட்டி .
படிப்பே யில்லாப் பாட்டி – ஆனால்
பலவும் தெரிந்த பாட்டி.

விடுக தைகள் போட்டே – என்னை
விழிக்க வைக்கும் பாட்டி.
குடுகு துவய தாச்சு – கையில்
கோல்பி டிக்கும் பாட்டி.

அப்பா அடித்துப் போட்டால் – என்னை
அணைத்தே தேற்றும் பாட்டி
தப்போ, தவறோ செய்தால் – என்னைத்
தடுத்துத் திருத்தும் பாட்டி.

சாய்ந்து மடியில் படுத்தால் – என்னைத்
தட்டிக் கொடுக்கும் பாட்டி .
நோய்கள் ஏதும் வந்தால் – அதை
நொடியில் போக்கும் பாட்டி.

யாருங் காட்டா அன்பை – என்றும்
எனக்குக் காட்டும் பாட்டி .
நூறு, நூறு ஆண்டு – இன்னும்
நூறு ஆண்டு வாழ்க !

 

Rhymes Video

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *