Aararo Aariraro Song Lyrics – ஆராரோ ஆரிரரோ
தாலாட்டுப் பாடல்
Araro ariraro Lyrics in Tamil
ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ
ஆரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு
கண்ணே யடிச்சாரார்
கற்பகத்தைத் தொட்டாரார்
தொட்டாரைச் சொல்லியழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்
அடிச்சாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்
மாமன் அடித்தானோ
மல்லி பூ செண்டாலே
அண்ணன் அடித்தானோ
ஆவாரங் கொம்பாலே
பாட்டி அடித்தாளோ
பால் வடியும் கம்பாலே
ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ
ஆரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு
Araro ariraro Tamil Cradle Song Video
Cradle Song Version 2
ஆராரோ ஆராரோ – கண்ணே நீ
ஆராரோ ஆரிரரோ!
ஆராடித்தார் நீ அழுதாய்? கண்ணே உனை
அடித்தாரைச் சொல்லி அழு!
மாமி அடித்தாளோ? – உன்னை
மல்லியப்பூச் செண்டாலே!
மாமன் அடித்தானோ! – உன்னை
மாலையிடும் கையாலே!
அக்கா அடித்தாளோ? – உன்னை
அலரிப்பூச் செண்டாலே!
அடித்தாரைச் சொல்லியழு – அவர்க்கு
ஆக்கினைகள் செய்திடுவேன்!
தொட்டாரைச் சொல்லியழு – அவர்க்குத்
தோள்விலங்கு பூட்டிடுவேன்!
தூங்காத குழந்தை:
யாரும் அடிக்கவில்லை! – என்னை
ஐவிரலும் தீண்டவில்லை!
பசிக்கல்லவோ நான் அழுதேன்! – என்றன்
பாசமுள்ள தாயாரே!