Onnum Onnum Rendu – ஒண்ணும் ஒண்ணும்
Onnum Onnum Rendu Lyrics
ஒன்னும் ஒன்னும் ரெண்டு
கண்கள் நமக்கு ரெண்டு
ரெண்டும் ஒன்னும் மூ ன்று
நம் கொடியின் வண்ணம் மூ ன்று
மூன்றும் ஒன்னும் நான்கு
ஓதும் வேதம் நான்கு
நான்கும் ஒன்னும் ஐந்து
நம் வயதும் இப்போ ஐந்து
ஐந்தும் ஒன்னும் ஆறு
அறிவு ம் நமக்கு ஆறு
ஆறும் ஒன்னும் ஏழு
வானவில்லின் வண்ணம் ஏழு
எழும் ஒன்னும் எட்டு
தட்டில் லட்டு எட்டு
எட்டும் ஒன்னும் ஒன்பது
விண்ணில் கிரகம் ஒன்பது
ஒன்பதும் ஒன்னும் பத்து
மணியும் இப்போ பத்து
Version 2
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
நமக்கு கண்கள் இரண்டு
இரண்டும் இரண்டும் நாலு
நாம் குடிப்பது பாலு
மூணும் மூணும் ஆறு
உழைத்தால் தான் சோறு
நாலும் நாலும் எட்டு
ஹரிக்கு பிடித்தது லட்டு
ஐந்தும் ஐந்தும் பத்து
அன்பே நமது சொத்து
Version 3
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
யானையெல்லாம் குண்டு
ரெண்டும் ரெண்டும் நாலு
நான் குடிப்பது பாலு
மூனும் மூனும் ஆறு
என்னைக் கொஞ்சம் பாரு
நாலும் நாலும் எட்டு
தட்டு நிறைய லட்டு
அஞ்சும் அஞ்சும் பத்து
அடுத்தவன் வாயைப் பொத்து….
Onnum Onnum Rendu Video