Paravai Ellam paaduchu Lyrics – பறவை எல்லாம் பாடுச்சு
Paravai Ellam Tamil Rhyme Lyrics
பறவை எல்லாம் பாடுச்சு
பக்கம் வந்து தேடுச்சு
கறவை மாடு சிரிச்சுச்சு
கறந்து பாலும் தந்துச்சு..!
குடிச்சி பறவை மகிழ்ந்துச்சு
கூட்டம் சேர கத்துச்சு
பசிக்கு இங்கே வந்திட
பாடிப் பாடி அழைச்சிச்சு..!
எங்கிருக்கும் பறவையும்
எகிறிப் பறந்து வந்துச்சு
இனத்தின் குரலைக் கேட்டுச்சு
இறங்கி வந்து பார்த்துச்சு..!
கோமாதா நமக்கு எல்லாம்
குடிக்க பாலும் தந்துச்சு
கூடி நாமும் கூட்டம் போட்டு
`அன்னை’ யென்று சொல்லுச்சு..!
பாதுகாக்கும் தாயாக
பட்டி தொட்டி சொல்லுது
சாதுவாக இருந்த அதுவும்
சினந்து காடு வெல்லுது..!
பறவைக் கூட்டம் நாமெல்லாம்
போற்றி அதை வணங்குவோம்
சிறகாய் நாமும் இருந்துமே
பறக்க வைத்து மகிழுவோம்..!