Vatta Vadiva Nilavu – வட்ட வடிவ நிலவுதான்
Tamil Lyrics
வட்ட வட்ட நிலவுதான்
வானில் நடந்து ஓடுதாம்
எட்டி எட்டிப் பிட்க்கவே
எந்தன் மனது எண்ணுதாம்
எட்டிப் பிடிக்க முடியாமல்
ஏங்கி மனது தவிக்குதாம்
சுட்டித் தனம் பண்ணாமல்
உள்ளங்கையில் தவழ்ந்து வா
அம்மா ஊட்டும் உணவை நீ
என்னுடன் சேர்ந்து உண்ண வா
Version 2
வட்ட வடிவ நிலவிது
வானில் மிதந்து செல்லுது
இரவில் நமக்குத் தெரியுது
தேய்ந்து மீண்டும் வளருது
எட்டி எட்டி பார்க்குது
எட்டாமல் தான் வருகுது
சோறு ஊட்ட உதவுது
சோலைக் கழகு காட்டுது